ஏம்பலம் அரசு பள்ளியில் 28ம் தேதி வானியல் காட்சி

புதுச்சேரி, ஆக. 22:  புதுவை லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் பொதுமக்களுக்கு வானியல் பற்றி தெரிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் வானியல் காட்சி நடத்தி வருகிறது.

அதன்படி, வரும் 28ம் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை வானியல் காட்சி ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. இந்த வானியல் காட்சியை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் பொதுமக்களுக்கு விளக்குகிறார். மேலும், தொலைபேசி வழியாக அந்த நேரத்தில் வானில் தெரியும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன் கூட்டத்தினை பொதுமக்கள், மாணவர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாத வானியல் வரைபடம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி லாஸ்பேட்டை முனைவர் அப்துல்கலாம் அறிவியல் மையம், கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. வானியல் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வானியல் காட்சியினை கண்டுகளித்து பயன்பெறலாம் என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertising
Advertising

Related Stories: