ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 22:     புதுச்சேரியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவும், மாத இறுதிநாளில் சம்பளம் வழங்கவும், அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல் ஏசிபி, எம்ஏசிபி போன்ற சலுகைகள், நிர்வாக மானியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கத்தோலிக்க கல்வி நிறுவன சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகம் எதிரே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணை தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன் உரையாற்றினார். வின்சென்ட் ராஜ் தொகுத்து வழங்கினார். போராட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொறுப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்வி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது சட்டசபை எதிரே மறியலில் ஈடுபட்டு சிறை செல்வது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: