வெள்ளை அறிக்கை வெளியிட மநீம தலைவர் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆக. 22:   மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில தலைவர் எம்ஏஎஸ்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அறிமுகப்படுத்திய இடைக்கால பட்ஜெட்டை குறை கூறி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழு பட்ஜெட்டையே தாக்கல் செய்வோம் என்று உறுதியளித்த புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசும் இடைக்கால பட்ஜெட்டையே பின்பற்றி வருவது கண்டிக்கத்தக்கது. தற்போது முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்யாததற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காததே காரணம் என்று கூறி வருகின்றார். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்யாததற்கு மத்திய அரசா, மாநில அரசா என்று காரணம் தெரிந்து கொள்ள முடியாமல் மக்கள் குழம்பி போய் உள்ளனர். எனவே முதல்வர் நாராயணசாமி மாநில திட்டக்குழு கூட்டம் என்ன தேதியில் கூட்டப்பட்டது? அதில் பட்ஜெட் நிதி குறித்து எடுக்கப்பட்ட முடிவின்படி அனுமதி கேட்டு என்ன தேதியில் மத்திய அரசுக்கு அனுப்பியது? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: