இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடங்கள்

வேப்பூர், ஆக. 22: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் சுமார் 50 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா