கல்லூரி மாணவி மாயம்

நெய்வேலி, ஆக. 22: குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையம் திருமலைவாசன் நகரை சேர்ந்தவர் அமீர். இவரது மகள் லஸ்கர். கடலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவியின் தோழியிடமும் விசாரித்ததில் அவர் கல்லூரிக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து