அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம், ஆக. 22: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு துணைவேந்தர் முனைவர் முருகேசன் தலைமையில், பதிவாளர்(பொறுப்பு) முனைவர் கிருஷ்ணமோகன் முன்னிலையில் சாஸ்திரி அரங்கம் முன் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முருகேசன், நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்து கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என உறுதி மொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், புல முதல்வர்கள், தொலைதூர கல்வி இயக்குநர், துறை தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

Tags :
× RELATED சாராயம் விற்ற 2 பேர் கைது