வான்பாக்கம் பகுதியில் பயன்பாட்டுக்கு வராத நம்ம டாய்ெலட்

நெல்லிக்குப்பம், ஆக. 22: நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வான்பாக்கம் பகுதியில், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன முறையில் நம்ம டாய்லெட் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை. இதனால் இக்கட்டிடத்தை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது.கட்டிடத்தின் உள்ளே அமைக்கப்பட்ட விளக்குகள் மற்றும் பைப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் இரும்பு பைப்புகளில் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இதனால் கட்டிடம் வீணாகி வருகிறது.எனவே, கழிவறை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED திட்டக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது