×

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், ஆக. 22: அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் விருத்தாசலம் கோட்டம் சார்பில் விருத்தாசலம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் வைரக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுப்பு சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும், புள்ளி கணக்கை காரணம் காட்டி சம்பளம் குறைப்பு செய்யக்கூடாது, சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும், ஆர்பிஎல்ஐ மேளாவில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும், பணி மாறுதல் கேட்ட ஊழியர்களுக்கு பணி இடமாற்றம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜிடிஎஸ் ஊழியர்களை பழிவாங்கும் போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் முன்தடுப்பு...