×

டெங்கு நோய் கண்டறியும் முகாம்

வேப்பூர், ஆக. 22: கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின்பேரில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா முன்னிலையில் வேப்பூர் அடுத்த பில்லூர் கிராமத்தில் டெங்கு நோய் கண்டறியும் முகாம் நடந்தது. இதில் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், துரைராஜ், ராகபிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று டெங்கு நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீரினால் பரவும் நோய்கள், கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்தும், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு, நிலவேம்பு கசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...