×

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் மோதி கழிப்பறை சுவர் இடிந்தது டவுன் பஸ் மீதும் மோதியதால் பயணிகள் அலறி ஓட்டம்

வேலூர், ஆக.22:ேவலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் மோதியதில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததுடன் டவுன் பஸ் மீதும் மோதியது. இதைப்பார்த்த பயணிகள் அலறி ஓடினர்.வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரும்பாலும் ஆயுட்காலம் முடிந்து ஓட்டை உடைசலாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழிகளில் நின்று விடுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அரசு பஸ்களில் மழை காலத்தில் மழைநீர் பஸ்சுக்குள் வருவதால் பயணிகள் பஸ்சுக்குள் குடை பிடித்தபடி சென்று வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்நிலையத்தில் இருந்து வளைவில் பஸ்ைச டிரைவர் திருப்பியபோது, அங்குள்ள பஸ் பிரேக் பிடிக்காமல் திடீரென அங்கிருந்த கட்டண கழிப்பறை சுவற்றின் மீது மோதியது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

அப்போது கழிவறையில் கட்டணம் வசூலிப்பவர்கள் மற்றும் கழிப்பறையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் ரிவர்ஸ் எடுத்தார். அப்போது பின்னால் வந்து நின்ற காட்பாடி செல்லும் டவுன் பஸ் மீதும் இந்த பஸ் மோதியது. இதனால் அதில் இருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரிடம் விசாரித்தனர். கடலூர் செல்ல இருந்த அனைத்து பயணிகளுக்கும் மாற்று பஸ் வசதி செய்யப்பட்டது.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்