×

குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பூதூர் கிராம மக்கள்

வேலூர், ஆக.22: குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி வேலூர் பிடிஓ அலுவலகத்தை பூதூர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.வேலூர் ஒன்றியம் ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறி அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேற்று காலை வேலூர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து தங்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரி, பிடிஓ அலுவலக மேலாளரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், பிடிஓ வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பூதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் நாங்கள் 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு 2 கி.மீ தூரத்தில் உள்ள மேல்நீர் தேக்கத்தொட்டியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த பிரதான பைப் லைனில் இருந்து 6 இணைப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டு வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுவதால் எங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வருவதில்லை.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...