×

குமரியில் 9,050 பேர் எழுதுகிறார்கள் போலீஸ் எழுத்து தேர்வுக்கான நிபந்தனைகள் எஸ்.பி. அறிவிப்பு

நாகர்கோவில், ஆக.22 : குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :2ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2ம் நிலை சிறை காவலர்கள் ( ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு வருகிற 25.8.19 அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி நிலையம், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் இந்து கல்லூரி, நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள வின்ஸ் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, வின்ஸ் ஆண்கள் கிறிஸ்தவ கல்லூரி, கோட்டார் குமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன.  மொத்தம் 9050 பேர் எழுதுகிறார்கள்.

விண்ணப்பதாரர் தேர்வு கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டு உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தை மாற்ற முடியாது. தேர்வு கூட அனுமதி சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் புகைப்படத்துடன், கூடிய வேறு அடையாள அட்டையையும் கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. எழுத்து தேர்வுக்கு வரும் பொழுது கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது. அழைப்பு கடிதம் கிடைக்க பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளம் www.tn.gov.in/tnusrb.com  என்ற முகவரியில் இருந்து அழைப்பு கடித நகல் எடுத்து தேர்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும். தேர்வு கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை ஒட்டி அதில் ஏ அல்லது பி பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். தேர்வு மையத்துக்குள் ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள், தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...