×

ஓய்வு வயதை 60 ஆக நீட்டிக்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.22:  பிஎஸ்என்எல் 2000ம் ஆண்டில் பொதுத்துறையாக மாற்றப்பட்டபோது பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிக்கும் என்ற உறுதிமொழி தரப்பட்டது. இப்போது அதனை மீறும் வகையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க மத்திய அரசும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் முனைந்துள்ளது. இதனை கண்டித்தும், ஓய்வு வயதை 60 ஆக நீடிக்க வலியுறுத்தியும், பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜூ, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், சஞ்சார் நிகாம் ஊழியர் சங்க உதவி செயலாளர் மைக்கேல், அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட ஊழியர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து பேசினர். மாநில உதவி தலைவர் இந்திரா, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் வனமூர்த்தியாபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு