புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் வரி பணத்தில் கட்டிய அரசு கட்டிடங்கள் சேதம்

புதுக்கோட்டை,ஆக.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் தற்போது சேதமடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அதனை சீர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 தாலுகாகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 497 பஞ்சாயத்து அமைப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளான பல்வேறு பெயர்களில் கொண்ட திட்டங்களில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பஞ்சாயத்து கட்டிடங்கள், நூலக கட்டிடங்கள், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடங்கள், சந்துணவு கூடங்கள், ரேஷன் கடைகள், இதைபோல் சுடுகாட்டில் தகன மேடைகள், கிராம கழிப்பறைகள், சமூதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. தற்போது இதுபோல் பல்வேறு திட்டங்களின் பெயர்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கு அனைத்தும் மக்களின் வரிப்பணங்கள் செலவு செய்யப்பட்டு வருகின்றது. இப்படி பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் சில திறக்கப்படாமலும் சில திறந்து ஒரு சில ஆண்டுகளில் அதனை பராமரிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்வதும் இல்லை. இதனால் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. இனியும் தாமதம் செய்யாமல் பயன்படுத்தாமல் உள்ள அரசு கட்டிடங்களை கணக்கெடுத்து கட்டிடங்களின் தண்மைகளை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நிதிகளை ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags :
× RELATED கீரனூரை சுற்றியுள்ள...