×

வயலக கூட்ட பொதுக்குழுவில் நிலத்தடி நீரை உயர்த்துவது பற்றி விவாதம்

பொன்னமராவதி, ஆக.22: பொன்னமராவதியில் வட்டார வயலக கூட்டத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நீர் ஆதாரங்களான கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் நீரை எவ்வாறு பராமரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.மேலும் மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டது.மேலும் மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் சார்ந்த திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டது. `இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம்’ என்ற முழக்கம் வைக்கப்பட்டு அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தற்போதைய விவசாயிகள் நிலமையை பாடலாக பாடப்பட்டது. இந்தியன் வங்கி மேலாளர் பாஸ்கர், கிராம வங்கி மேலாளர் மணிகண்டன், வேளாண்மை துறை, மீன்வளத்துறை, வருவாய் துறை, நபார்டு வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.வயலக வட்டார தலைவர் சண்முகம், துணைத் தலைவர் குமரேசன், செயலாளர் சுந்தர்ராஜ், இணைச் செயலாளர் அழகர்சாமி பொருளாளர் பெத்தான், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தானம் வயலக அறக்கட்டளை அலுவலர்கள், வயலக இயக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...