பைக்கில் வந்த தம்பதியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு

கந்தர்வகோட்டை, ஆக.22: கந்தர்வகோட்டை அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஆதனக்கோட்டையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் செந்தில்குமார்(42). இவர் தனது மனைவி மலர்கொடியுடன் (38) கந்தர்வகோட்டையிலிருந்து ஆதனக்கோட்டைக்கு பைக்கில் கொண்டிருந்தார். அப்போது வளவம்பட்டி விளக்கு ரோடு அருகே பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் மலர்கொடி அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினர்ய இதுகுறித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை எஸ்ஐ கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED திருமயம் பஸ் ஸ்டாண்டில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு