பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கினர் தனியார் ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்தது

கந்தர்வகோட்டை, ஆக.22: கந்தர்வகோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான ஆம்புலென்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை ஊழியர் லெட்சுமிகாந்தன் தன்னுடைய உறவினரை திருச்சியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அழைத்துவர தனியார் ஆம்புலென்ஸ் வண்டியை எடுத்துக் கொண்டு திருச்சி நோக்கி வந்தார். வண்டியை பட்டுக்கோட்டையை சேர்ந்த டிரைவர் அஜிஸ் என்பவர் ஓட்டிவந்தார். கந்தர்வகோட்டை மட்டங்கால் தரைபாலம் அருகே ஆம்புலென்ஸ் வந்தபோது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆம்புலென்சில் வந்த லெட்சுமிகாந்தன் மற்றும் டிரைவர் அஜிஸ் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர். ஆம்புலன்ஸ் பலத்த சேதமடைந்தது.இவ்விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED கீரனூரை சுற்றியுள்ள...