×

பல நோய்களை குணப்படுத்தும் என நம்பிக்கை உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புதியதாக மாற்றியமைக்கப்பட்ட பாடப் புத்தகம் சார்ந்த பயிற்சி

பொன்னமராவதி, ஆக.22: பொன்னமராவதி ஒன்றியத்தில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான புதியதாக மாற்றிமைக்கப்பட்ட பாடப்புத்தகம் சார்ந்த பயிற்சி நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 2019ம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடப்புத்தகம் தொடர்பான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி பொன்னமராவதி வட்டார வள மையத்தில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பாடவாரியாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் நடந்த பயிற்சியை பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரோசாரியோ ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் அனைத்து உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி நடைபெற்றது.

இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்கும் விளக்க செயல்முறை சார்ந்து தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த புத்தாக்க பயிற்சியானது ஆசிரியர்களுக்கு புதியப்பாட பொருளை புரிந்து கொள்ளுதல், பாடம் சார்ந்த பொருளை வளப்படுத்தி கொள்வதற்கும் மற்றும் கியூ ஆர் கோடு மூலம் மாணவ, மாணவிகளுக்கு உடனுக்குடன் பாடம் சார்ந்த கூடுதல் தகவல்களை அளிப்பதற்கும் மிகப்பயனுள்ளதாக அமையும்.
இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, அழகுராஜா, சரவணன், ரஹிமாபானு, புவனேஸ்வரி ஆசிரியர்கள் சின்னத்தம்பி, கவுசல்யாஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இந்த புதிய பாடத்திட்ட புத்தாக்க பயிற்சியில் பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 196க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்பாண்டி செய்திருந்தார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...