×

புதுக்கோட்டை பகுதியில் கழுதை பால் விற்னை அமோகம்

புதுக்கோட்டை, ஆக.22: கழுதை பால் பல நோய்களை சரியாக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் வாங்கி குடிப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.கழுதையை பார்த்தால் நண்மை வரும் என்று நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. இதனால் சில வீடுகளில் கழுதை படத்தை மாட்டிவிட்டு இருப்பார்கள். சிலர் தொழில் செய்யும் இடங்களில் கழுதை படத்தை மாட்டிவிட்டு பார்த்து வருகின்றனர். தற்போது கழுதை பால் குடித்தால் பல நோய்கள் மனிதர்களுக்கு சரியாகும் என்று நம்பத்தொடங்கியுள்ளனர். கழுதை பால் குழந்தைள் சாப்பிட்டால் செரிமான கோளாறு சரியாகும் என்றும், மலச்சிக்கல் சரியாகும் என்று நம்புகின்றனர். மேலும் பெரியவர்களுக்கு வயிற்றுபுண் இழப்ப வாங்குதல் உள்ளிட்ட நோய்கள் சரியாகும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக விருத்தாச்சலத்தில் வந்த இரண்டு குடும்பத்தினர் நான்கு கழுதைகளை வைத்த கொண்டு கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். குழந்தைகளுக்கு மருந்த வழங்கும் சங்கில் ஒரு சங்க கழுதை பால் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். சில வீடுகளில் அனைவரும் வாங்கி சாப்பிடுகின்றனர். சிலர் கிண்டல் செய்து கொண்டு அனைத சாப்பிடுவதில்லை. சாப்பிடாதவர்களை கழுதை பால் விற்பனை செய்பவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. பலர் கழுதை பால் வாங்கி சாப்பிடுதவால் விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை காலை 6 மணி முதல் 10 மணி வரை தான் நடைபெறுகிறது. வெறும் வயற்றில் தான் சாப்பிட வேண்டும் என்று விற்பனை செய்பவர்கள் சொல்கின்றனர். இதனால் 10 மணிக்கு மேல் விற்பனை செய்வதில்லை. கழுதையை மேச்சலுக்கு அனுப்பிவிடுகின்றனர்.

இதுகுறித்து கழுதைபால் விற்பனை செய்பவர்கள் கூறியதாவது: நாங்கள் விருத்தாச்சலத்தில் இருந்து வருகிறோம். இரண்டு குடும்பங்கள் குடும்பத்திற்கு இரண்டு கழுதை என நான்கு கழுதையை கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டில் இருந்து புறப்பட்டோம். தொடர்ந்து கிராமம் கிராமம்மாக சுற்றி கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றி வருகிறோம். கழுதை பால் உடலுக்கு நண்மையை தரக்கூடாது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறு வயிற்றில் சாப்பிப்டால் வயிற்சி எரிச்சல் செரிமான கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகள் தீரும். இதனால் மக்கள் இதனை வாங்கி பருகின்றனர். ஒரு சங்கின் விலை ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களுக்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். காலை 10 மணிக்கு மேல் விற்பனை செய்வதில்லை. எந்த கிராமத்தில் இருக்கிறோமோ அந்த கிராமத்தில் கழுதை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு சமைத்து சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கொள்வோம். இரண்டு நாட்களுக்கு பிறகு அடுத்த கிராமத்திற்கு சென்று விடுவோம். இப்படியே தொடர்ந்து எங்கள் பயனம் இருக்கும். தேவைப்பட்டால் ஒருவர் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவோம் என்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...