×

விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு முத்துமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

முத்துப்பேட்டை, ஆக.22: முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன் தினம் ஆவணி செவ்வாய் கிழமையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக சந்தன காப்பு அலங்காரம் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காலைமுதல் மாலை வரை சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...