×

வடபாதிமங்கலம் அருகே மாற்று கட்சிகளை சேர்ந்த 100 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர்

மன்னார்குடி, ஆக. 22: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே பழையனூர் கிராமத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐவி குமரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மன்னை கிழக்கு ஒன்றியம், பழையனூர் ஊராட்சி 44 காக்கையாடி கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாற்று கட்சியினர் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் எம்எல்ஏ மான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.இதில், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சுப்பிரமணியன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...