×

கண்டிதம்பேட்டையில் மக்கள் நேர்காணல் முகாம் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மன்னார்குடி, ஆக. 22 : மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர் காணல் முகாமில் வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி பங்கேற்று 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மன்னார்குடி அருகே கண்டிதம் பேட்டை சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் கார்த்திக், மண்டல துணை தாசில்தார் ஜெயபாஸ்கர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் கண்டிதம் பேட்டை ஊராட்சியை சேர்ந்த கண்டிதம்பேட்டை, 35 திருப்பாலக்குடி, 36 திருப்பாலக்குடி, சுந்தரக்கோட்டை ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். முகாமில் சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு, தமிழக தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் , சமூகநலத்துறை , ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் உள் ளிட்ட பல்வேறு அரசுத்துறையில் சார்பில் விழிப்புணர்வு அரங்குகள் அமைக் கப் பட்டிருந்தன. இவற்றை ஆர்டிஓ புண்ணியகோட்டி, தாசில்தார் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் புண்ணியகோட்டி தலைமை வகித்து மக்கள் நேர்காணல் முகாமை துவக்கி வைத்து கல்வி உதவித் தொகை 11, முதியோர் உதவித் தொகை 12, வித வை உதவித் தொகை 3, திருமண உதவித் தொகை 4, மாற்றுத் திறனாளி 1, இயற்கையாக மரணமடைந்தவர்களுக்கான உதவித் தொகை 3, உட்பிரிவு பட்டா மாறுதல் 8, புதிய குடும்ப அட்டைகள் 15 என 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முன்னதாக வருவாய் ஆய்வாளர் வளர்மதி வரவேற்றார். கிராம நிர்வாக அதிகாரி ரேவதி நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...