×

திருவாரூரில் மழை

திருவாரூர், ஆக 22: திருவாரூர்யில் நேற்று இரவு 7 மணி முதல் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரையில் மிதமான மழை பெய்தது. கடந்த 4 மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தனிந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேட்டூர் அணை மற்றும் கல்லணை திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மழையானது உழவு பணிக்கும் பயன்படும் என்பதாலும் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...