×

23 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக. 22: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்பட 23 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து 50 சதவீத ஊதியத்தினை பென்ஷனாக வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரை படி பணிமூப்பு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், அஞ்சல் துறையை தனியாரிடம் தாரை வார்க்க முயற்சிக்கும் முடிவினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உட்பட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை பொறுப்பாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் பிரபாகரன், சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...