×

விவசாயிகள் ஏமாற்றம் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 12 குவிண்டால் பருத்தி மகசூல் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 6 குவிண்டால் மட்டுமே மகசூலாக கிடைத்துள்ளது வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் தரமானதாக இருக்க வேண்டும்

மன்னார்குடி, ஆக. 22: வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வெண்ணாறு வடிநில உபகோட்ட ஆய்வு மாளிகையில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் மன்னார்குடி மற்றும் நீடா மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வரும் பணிகள் குறித்து தமிழக நிதித்துறை துணை செயலர், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அரவிந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் ஏரி, வாய்க்கால் கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் மற்றும் மன் னார்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட வாய்க்கால்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, பணிகளின் முன்னேற்றம் குறித்து செயற்பொறியாளர்கள் கண்ணன், வில் வேந்தன் மற் றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரிடம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.இதில் பணிகள் நடைபெறும் வாய்க்கால்களில் தூர்வாரப்படும் தூரங்களை தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்கப் பட வேண்டும். மேலும் அதிகாலை யில் தொடங்கி நள்ளிரவு வரை தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும். பணிகளை தரமானதாக செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இப்பணிகள் விவசாயிகளுக்கானது ஆகவே தூர்வாரும் பணிகளை உடன் இருந்து கண்காணித்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என பொதுப் பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி கூறினார்.

அதனைத்தொடர்ந்து மன்னார்குடி தாலுகா கர்ணாவூர் கிராமத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் அரவத்தூர் வாய்க்கால மற்றும் பிரிவு வாய்க்கால் பொக்கலின் இயந்திரம் மூலம் ரூ 19 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடை பெற்று வருவதை , சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கூட்டத்தில் திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வில்வேந்தன், பொதுப்பணித்துறை முன்னாள் சிறப்பு செயலர் பத்மநாபன், உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோ, சங்கர், உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...