பொதுமக்களுக்கு அழைப்பு மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருக்காட்டுப்பள்ளி, ஆக.22: தஞ்சை மாவட்டம் பூதலூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பூதலூர் ஒன்றியத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் அருள்மொழி ராஜகுமாரி, மெய்யப்பன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காட்வின் பொன்ராஜ் ஜெயகரன் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் கலந்து கொண்டு 211 மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதனை செய்து புதிய அட்டைகள் வழங்குதல், அட்டைகள் புதுப்பித்தல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், உதவி உபகரணங்களுக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். முகாமில் தஞ்சை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பங்கேற்று தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் லட்சுமிநாராயணன், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் நன்றி கூறினார்.

Related Stories: