தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் போக்குவரத்து விதிகளை மீறி லோடு ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்

கும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் நகர பகுதியில் கட்டிட தொழிலுக்கு செல்பவர்கள், சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து தினம்தோறும் அதிகளவில் வருகின்றனர். தொழிலாளர்களை பேருந்தில் அழைத்து சென்றால் அதிக செலவாகும் என்பதால் கட்டிட பொருட்களுடன், வேலையாட்களையும் மேஸ்திரிகள் ஏற்றி சென்று வருகின்றனர். கும்பகோணத்தில் தினம்தோறும் அதிகமான லோடு ஆட்டோக்கள் தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர். லோடு ஆட்டோவில் பொதுமக்களை ஏற்றி செல்லக்கூடாது என்று அரசு உத்தரவு இருந்தும் அலட்சியப்படுத்தும் விதமாக ஏற்றி செல்கின்றனர்.கடந்த 18ம் தேதி திருச்சி மாவட்டம் முசிறியில் கிணற்றுக்கு லோடு ஆட்டோ பாய்ந்து 8 பேர் பலியாகினர். ஆனால் இந்த விபத்தை பற்றி கவலைப்படாமல் கும்பகோணத்தில் லோடு ஆட்டோ வைத்திருப்பவர்கள், பொதுமக்களையும் தொழிலாளர்களையும் ஆபத்தான நிலையில் அழைத்து செல்கின்றனர்.

இதை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து லோடு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், லோடு ஆட்டோவில் பொதுமக்களை ஏற்றி செல்லக்கூடாது. இதை மீறி லோடு ஆட்டோவில் பொதுமக்களையோ, தொழிலாளர்களையோ ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: