×

மயிலாடுதுறை நகரில் மதுக்கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்

மயிலாடுதுறை, ஆக.22: மயிலாடுதுறை நகரில் மதுக்கடைகளை அகற்றாவிட்டால் அக்.2 ம்தேதி போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் போராட்டக்குழு அறிவித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம் மயிலாடுதுறை தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் தலைமையில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், புகழரசன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவொளி மற்றும் வினோத், மக்கள் தொடர்பாளர்கள் சிவச்சந்திரன் மற்றும் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, ஆன்மீக நகரான மயிலாடுதுறையில் கூடுதல் மதுக்கடைகளை தொடர்ந்து திறந்துவரும் தமிழக அரசுக்கு இக்கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. உடனே மயிலாடுதுறை நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் தமிழக அரசு அகற்ற வேண்டும். அகற்ற தவறினால் காந்திஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்துவது. மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் உடனே அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது.காவிரி டெல்டா பகுதியில் நடுநகரமாக திகழும் மயிலாடுதுறையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க மத்திய அரசுக்கு மயிலாடுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மூலமாக குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச ஜெய்சங்கருக்கு கோரிக்கை மனு அளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...