வடகிழக்கு பருவமழை தொடக்கம் மக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

சீர்காழி, ஆக.22: சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் வெளியிட்டசெய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழையின்போது மின்கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்தாலோ அல்லது கீழே விழுந்து கிடந்தாலோ மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். மின்கம்பம் மற்றும் இழுவைக் கம்பிகளில் கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின் கம்பங்களில் துணி உலர்த்தும் கொடிகளைக் கட்டக் கூடாது. குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் எக்காரணம் கொண்டும் தண்ணீரில் இறங்க வேண்டாம். மின்தடை ஏற்பட்டால் மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களில் தாமாகவே ஏறி சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. இடி, மின்னலின்போது மின்சாதன பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED நாகை மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது