ஆதிநாகத்தம்மன் சக்தி ஆலய பால்குட கொடியேற்று விழா

கொள்ளிடம், ஆக.22: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு சுயம்பு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலயத்தின் பால்குட விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். தொடர்ந்து வரும் 25ம் தேதி மாலை அங்குள்ள கோட்டையா கோயிலிலிருந்து பக்தர்கள் கரகம், காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.Tags :
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...