கொள்ளிடம் டூவீலர் சுவரில் மோதி ஆசிரியர் பரிதாப பலி

கொள்ளிடம். ஆக.22: நாகைமாவட்டம கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் குருமணி(52). இவர் முதலைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற பட்டாபிசேக விழாவில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு இருசக்கர மோட்டார் பைக்கிள் வேகமாக சென்று கொணடிருந்தார். அப்போழுது அவரின் வீட்டை நோக்கி வேகமாக சென்ற பைக் வீட்டில் முன்புற சுவற்றில் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த குருமணி சம்பவ இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் குருமணி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். குருமணியின் இறப்பை முன்னிட்டு முதலைமேடு நடுநிலைப்பள்ளிக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED பணி பாதுகாப்பு வழங்க கோரி கல்லூரி...