விஏஓ நடவடிக்கை வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் மண்டல பொது மேலாளர் தகவல்

நாகை, ஆக.22: வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் குடந்தை கோட்டம் சார்பில் வரும் 28ம் தேதி முதல் இரவு, பகலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகை மண்டல பொது மேலாளர் தசரதன் தெரிவித்துள்ளார்.வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நடைபயணமாகவும், பஸ்களிலும் வந்து செல்வார்கள். க்தர்கள் வசதி கருதி வரும் 28ம் தேதியிலிருந்து வரும் 9ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் குடந்தை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இரவு, பகலாக இயக்கப்பட உள்ளது. திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, பூண்டிமாதா கோயில், ஓரியூர், பட்டுக்கோட்டை, சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, சென்னை, காரைக்கால், நாகூர், நாகை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை போன்ற முக்கிய ஊர்களில் இருந்து 24 மணி நேரமும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.Tags :
× RELATED போஷன் அபியான் திட்டத்தை அரசு துறைகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்