செங்குன்றம் அருகே அம்மன் கோயிலில் நகை கொள்ளை

செங்குன்றம், ஆக. 22: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பிரதான சாலையில் சக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை பக்தர்கள் கோயிலுக்கு வந்தபோது, கோயிலின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த, பக்தர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த 1 சவரன் தாலிச் சரடு, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு பித்தளை அண்டா கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் செங்குன்றம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார்  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆவடி, அம்பத்தூர் பகுதி சிடிஎச்...