முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம் துவக்கம்

திருவள்ளூர், ஆக. 22: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம்   ஒரு வாரம்  நடக்கிறது என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர் கூட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது. வரும் 29ம் தேதி வரை விடுமுறை நாள் தவிர, ஏழு நாட்கள் நடக்கிறது. மண்டல துணை தாசில்தார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான நிலைக்குழு, நகரங்களில் வார்டு மற்றும் கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களைப் பெறுவர்.இம்மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை, தெருவிளக்கு, மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான  குறைகளுக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்தில் கண்டறியப்படும். பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
× RELATED ஆவடி, அம்பத்தூர் பகுதி சிடிஎச்...