பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பள்ளிப்பட்டு, ஆக. 22:
ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. வட்டாட்சியர் பாண்டியராஜன் வரவேற்றார். அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் 1064 பயனாளிகளுக்கு ₹3.92 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில், எம்.எல்.ஏக்கள் பி.எம்.நரசிம்மன், சிறுணியம் பலராமன், ஆவின் சேர்மன் வேலஞ்சேரி த.சந்திரன், உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்பொருள் கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.


Tags :
× RELATED ஆவடி, அம்பத்தூர் பகுதி சிடிஎச்...