போக்சோவில் வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, ஆக. 22: கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லுர் கிராமத்தில் வீடுகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதாவுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார்  கடந்த 13ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த இந்து (24). என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் ஆத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாதவன் (24). என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று பிடித்தனர்.
பின்னர், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக இடி,...