பைக் திருடியதாக 2 பேரிடம் போலீஸ் விசாரணை

பூந்தமல்லி, ஆக.22: பூந்தமல்லி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(21). தனது மோட்டார் சைக்கிளில் சென்னீர்குப்பம் சென்றார். அங்குள்ள ஒரு கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கினார்.
பின்னர் அவர்திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  நேற்று முன்தினம் காலை கரையான்சாவடி பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்,  போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடினார்கள். இதனையடுத்து இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில்.  பூந்தமல்லி சென்னீர்குப்பத்தை சேர்ந்த அகினாஸ் (24), அரசு(21) ன்பதும் இருவரும் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றதாக  தெரிவித்தனர். இதையடுத்து இருவரிடமும் ோ பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags :
× RELATED ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி