அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி


மதுராந்தகம், ஆக. 22: மதுராந்தகம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.மதுராந்தகத்தில் செங்குந்தர்பேட்டை, ராமர்கோயில் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி, அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் 2 அல்லது 3 முறை மின்தடை ஏற்படுவதுடன், பகல் நேரங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. இதனால், மதுராந்தகம் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், கொசுக்கடியால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பாடாதவாறு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து மதுராந்தகம் மின்வாரிய பொறியாளர் பிரகாஷிடம் கேட்டபோது, சில தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்று மின்தடை ஏற்படுகிறது. அதை சீரமைத்து வருகிறோம். இனி மின்தடை ஏற்படாது என்றார்.


Tags :
× RELATED அறிவியல் செயல்திட்டம் போட்டியில்...