×

சாலவாக்கம் அரசு பள்ளியில் 292 மாணவர்களுக்கு லேப்டாப்

உத்திரமேரூர், ஆக. 22: சாலவாக்கம் அரசு பள்ளியில் 292 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயரூபி தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் துரைவேலு, ஊராட்சி செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் வெங்கடேசன், பாபு, முரளிதரன், விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பக்தவத்சலம் ஆகியோர் வரவேற்றனர்.காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, 11 மற்றும் 12ம் வகுப்புக மாணவ, மாணவிகள் 292 பேருக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கினார்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...