காஞ்சிபுரத்தில் ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த நாள்விழா காந்தி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் ராஜிவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் வீரபத்திரன், சடையாண்டி, லோகநாதன், பச்சையபன், ஆறுமுகம், சாம்பசிவம், குமார், நகர நிர்வாகிகள், சுகுமாரன், குப்புசாமி, பிரபு, சந்தானம், சிவராஜ், பழனி, பவுல், முனுசாமி, வட்டார நிர்வாகிகள் இன்பா, பால்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED தலித் சேனா அமைப்பு செயற்குழுக் கூட்டம்