மயங்கி விழுந்து வாலிபர் சாவு

பெரும்புதூர், ஆக. 22: நடந்து சென்ற வாலிபர், திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.வேலூர் மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்த்தவர் மணி (22). பெரும்புதூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மணி, வேலைக்கு புறப்பட்டார். இதையொட்டி, ராமானுஜர் கோயில் குளம் அருகே நடந்து சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். புகாரின்படி பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் குடிமராமத்து பணிகள்...