மணல் திருடிய 3 பேர் சிக்கினர்

திருக்கழுக்குன்றம், ஆக. 22: திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடப்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ அசோக சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது, பாலாற்றில் இருந்து 3 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டு வருவது தெரிந்தது. உடனே 3 மாட்டு வண்டிகளையும், 2 பேரையும் மடிக்கி பிடித்தனர். ஒருவர் தப்பிவிட்டார். இதையடுத்து அவர்களை, மாட்டு வண்டிகளுடன் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வல்லிபுரத்தை சேர்ந்த கணபதி (35), அகதீஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த வினோத்குமார் (27) என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED வங்கியில் இருந்து பின் தொடர்ந்து...