உத்திரமேரூர் அரசு கல்லூரியில் புதிய பாடத்துக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

உத்திரமேரூர், ஆக. 22: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் செயல்படும் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 -2020ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை பாடப்பிரிவில் புதிதாக பிஏ பொருளியியல் பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற்கான, விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் முதல் கல்லூரியில் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்கள் வரும் 27ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்படும். இந்த பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி காலை 9.30 மணியளவில் கல்லூரியில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் க.சு.மீனா அறிவித்துள்ளார்.


Tags :
× RELATED வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை