×

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 40 ஆயிரம் மரக்கன்றுகள்

காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ₹10 லட்சம் மதிப்பில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
காஞ்சிபுரத்தில் திட்ட இயக்குநர் தர் தலைமையில், கலெக்டர் பொன்னையா மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் களக்காட்டூர் உள்பட 5 ஊராட்சிகளில் 3000 மரக்கன்றுகள், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 29 கிராங்களில் 5000, பெரும்புதூர் ஒன்றியத்தில் 15 கிராமங்களில் 2000, பரங்கிமலை ஒன்றியத்தில் 6 கிராமங்களில் 700, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 12 கிராமங்களில் 3000 மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மேலும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 18 கிராமங்களில் 2000, திருப்போரூரில் 11 கிராமங்களில் 4000, மதுராந்தகம் ஒன்றியத்தில் 21 கிராமங்களில் 4500, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 3 கிராமங்களில் 4075, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 27 கிராமங்களில் 4100, சித்தாமூர் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளில் 3000, லத்தூர் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளில் 2850, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் 11 ஊராட்சிகளில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.மொத்தத்தில் 40 ஆயிரத்து 225 மரக்கன்றுகள் ₹ 10 லட்சத்து 05 ஆயிரத்து 625 செலவில் நடப்பட்டுள்ளன.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...