5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில் செயின் பறிப்பில் தொடர்புடைய ஜமீன்  பல்லாவரம் ரோசய்யா (24), தண்டையார்பேட்டை தொத்து (எ) வினோத் (25), திருட்டு வழக்கில் தொடர்புடைய பழவந்தாங்கல் ரகுபதி நகரை சேர்ந்த ராஜசேகர் (எ) ராஜி (22), கொலை வழக்கில் தொடர்புடைய புழல் காவாங்கரையை சேர்ந்த  அபி  (எ)அபினேஷ் (24), அடிதடி வழக்கில் தொடர்புடைய மேற்கு தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) கோல்டு மணி (24) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: