லாரி மோதி இறந்த சமையல்காரர் குடும்பத்துக்கு 13 லட்சம் இழப்பீடு

சென்னை: மாம்பலத்தை சேர்ந்தவர் சுந்தராஜன். சமையல்காரராகவும், கோயில் புரோகிதராகவும் வேலை செய்து வந்தார். கடந்த 6.07.2013ம் அன்று மேற்கு மாம்பலம், சக்கரபாணி சைக்கிளில் வேலைக்கு சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார்.  விசாரணையில் லாரி தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சுந்தராஜனின் தாய் அலமேலு அம்மாள், தனது மகனின் இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி,  சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி உமா மகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தபோது லாரி உரிமையாளர் தரப்பில், ‘‘இவ்விபத்திற்கு சுந்தரராஜன்தான் காரணம். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டனர்.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் உயிரிழந்த சுந்தராஜன் பிரேத பரிசோதனை சான்றிதழை வைத்து பார்க்கும்போது 45 வயது என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வேலை செய்து மாதம் ₹12 ஆயிரம் சம்பளம்  வாங்கியதாக கூறப்படுகிறது. எனவே அவரது தாய்க்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ₹13 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: