×

ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தனது மாத ஊதியத்திலிருந்து ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவி

ராஜபாளையம், ஆக. 20: ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தனது நான்கு மாத ஊதியத்திலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டியும், 200 பயனாளிகளுக்கு முடிதிருத்தும் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் புதல்வர் ரமேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில்  மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி மற்றும் வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் சலவை தொழிலாளர், முடி திருத்தும் தொழிலாளர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி