×

வத்திராயிருப்பு அருகே மழைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம்

வத்திராயிருப்பு, ஆக. 20: வத்திராயிருப்பு அருகே நக்சல் சிறப்பு அலுவல் பிரிவு சார்பில் மலைவாழ் இன மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வத்திராயிருப்பு பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இப்பகுதியில் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள் தாணிப்பாறை ராம்நகரில் 75 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள். நெடுங்குளம் வள்ளிம்மை நகரில் 10 குடும்பங்கள், கான்சாபுரம் ஆத்திக்கோயில் 15 குடும்பங்கள், பிளவக்கல் அணை பகுதியில் 20 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள். மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள் மலையில் கடுக்காய் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக மலையில் தங்கி சேகரித்து வந்து விற்பனை செய்வார்கள். மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்களை மாவேயிஸ்ட் மற்றும் நக்சல்கள் பயன்படுத்தி காலூன்றி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கான சில அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நாக்சல் சிறப்பு அலுவல் சார்பில் மலைவாழ் மக்களுக்கு குன்னூர் வட்டார அலுவலக சார்பில் வட்டார மருத்துவ அலவலர் டாக்டர் ஜெயராமன், டாக்டர்கள் இந்திரா, வன்னியராஜ் உள்ளிட்டோர் சிகிச்சையளித்தனர். பின்னர் தாணிப்பாறை ராம்நகரில் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த முகாமை திருவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நக்சல் சிறப்பு அலுவல் பிரிவு எஸ்.ஐ செல்வகுமார் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை