×

பட்டா வழங்கியும் நிலம் தரவில்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை கிராமமக்கள் ஆவேசம்

தேனி, ஆக.20: தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி 10 ஆண்டுகளாகியும் நிலத்தை அளந்து கொடுக்காததை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் ஈடுபட்டனர்.ஆண்டிபட்டி வட்டம், மேக்கிழார்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த விழாவின்போது, மேக்கிழார்பட்டி, பாலக்கோம்பை, ஆரவாரம்பட்டி, தெப்பம்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். இதற்கான நிலத்தை அளந்து இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து போராட்டங்களை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் நடக்கவிலலை.நேற்று இக்கிராமத்தை சேர்ந்த பயனாளிகள் வீட்டுமனைப்பட்டா இடத்தினை அடையாளப்படுத்தி வரைபடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். தேனி நகர செயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்