×

மானிய விலை ஸ்கூட்டர்கள் துணை முதல்வர் வழங்கினார்

தேனி, ஆக. 20: தேனியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் 702 மகளிருக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நேற்று அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 702 வேலைபார்க்கும் மகளிருக்கு மானிய விலையில் ரூ.1 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டர்களை வழங்கினார். மேலும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 42 மகளிருக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 70 மதிப்பிலான சுழல்நிதியினையும், 177 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும் வழங்கினார்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 17.5 லட்சம் வீடுகளை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 20 கிலோ இலவச அரிசி வழங்குவதன் மூலம் உணவு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்னமும் ஒரு வார காலத்தில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட உள்ளது. ஏற்கனவே மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ, கலைஅறிவியல் கல்லூரிகளை தேனி மாவட்டத்திற்கு இந்த அரசு கொடுத்துள்ளது. இதன்மூலம் தேனி மாவட்டம் கல்வி மாவட்டமாக மாறப்போகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் பயனாளிகள், அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?